Tamilalayam

வானுயர வாழியவே

 

செந்தமிழ்த் தாய்மொழியை எம் நாவில் தினமுரைத்து

எங்கும் நாம் தமிழரெனத் தரணியிலே தலைநிமிர

தீந்தமிழை இங்கெமக்கு சீரோடு பரிந்தூட்டும்

எங்கள் தமிழாலயமே என்றென்றும் வாழியவே!

 

தமிழினத்தின் பண்பாடும் கலாச்சார மேம்பாடும்

எதுவெனவே எமக்குணர்த்தி எம் இலக்கின் திசை நடாத்தி

வழியது நாம் மாறாது கரம்தந்து எமைக் காக்கும்

எங்கள் தமிழாலயமே என்றென்றும் வாழியவே!

 

தம் நலம் கருதாது பைந்தமிழின் சேவைசெய்து

கல்வியொடு கலை புகட்டும் நல்லாசான்கள் துணையிருக்க

வந்திடும் தடை வென்றிடும் நெறியாள்கைத் திறன்கொண்ட

எங்கள் தமிழாலயமே என்றென்றும் வாழியவே!

 

கற்போம் எம் முத்தமிழை கசடறவே நன்குணர்ந்து

வைப்போம் நம் தாய்மொழியை பார்புகழ நாமிணைந்து

நிற்போம் உன் விழுதெனவே விருட்சமாய் நீ வானுயர்ந்து

நொய்ஸ் தமிழாலயமே என்றென்றும் வாழியவே!

30 ஆவது அகவை நிறைவு சிறப்பு மலர்

வெளியீட்டு பாடல்

தேர்வு வினாத் தாள்கள்

 

தமிழாலய கீதம்

 

 

கல்வியும் கலையும்

 

நம்மிரு கண்கள்

 

நல்தமிழ் மொழி

 

எங்கள் உயிராகும்

 

பன்மொழிக் கல்வியும்

 

பல்கலை நுட்பமும்

 

பயிற்றுவிக்கும் தமிழாலயம்

 

எங்கள் தமிழாலயம்

 

தன்மானத் தமிழர்

 

பண்பாடதனை

 

தரணியிற் பரப்பிடும் தமிழாலயம்

 

எங்கள் தமிழாலயம்

 

பாலகர் நாங்கள்

 

பாடி ஆடி

 

படித்து மகிழும் ஆலயம்

 

எங்கள் தமிழாலயம்

 

பாவலர் போற்றிட

 

நாவலர் வாழ்த்திட

 

என்றென்றும் வாழிய தமிழாலயம்

 

எங்கள் தமிழாலயம்

 

**********

 

தமிழ் வாழ்த்து


வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

 

வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி

வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்தும்  அளந்திடும்

வண்மொழி வாழியவே!

 

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழிய வே!

 

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையக மே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

 

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

வளர்மொழி வாழிய வே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

 

வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி

வாழிய வாழிய வே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

 

எங்கள் தமிழ்மொழி! ...

எங்கள் தமிழ்மொழி! ...

என்றென்றும் வாழிய வே!

  

          மகாகவி  சுப்பிரமணிய பாரதியார்